பொன்னேரி: வடபெரும்பாக்கத்தில் நிலத்தகராறில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிய உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி 50.இவருக்கும் இவரது தம்பி சோமசுந்தரம் 49 இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு காலி நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக தமது தம்பியை கோவிந்தசாமி தட்டிக் கேட்டபோது உறவினர்களுடன் வந்த சோமசுந்தரம் அண்ணன் கோவிந்தசாமியை தலையில் வெட்டிய வழக்கில் தம்பி சோமசுந்தரம் உட்பட ஆகிய மூன்று பேருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு