திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் 18. தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வரும் நீரஜ் தமது நண்பர்களுடன் இன்று மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார் அவர் நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்