திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடைகளுக்கு வரி விதிப்பதில் பாரபட்சம் பார்க்கும் நகராட்சி வருவாய் ஆய்வாளரை கண்டித்து பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை இன்று காலை முடி திருத்தும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.