திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்திலிருந்து எரிவாயு ஏற்றிக் கொண்டு தென்காசியை சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் டேங்கர் லாரியை ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி இன்று காலை சென்றார். மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் டேங்கர் லாரி திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்தது.சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கவிழ்ந்த எல்பிஜி டேங்கர் லாரி பத்திரமாக மீட்கப்பட்டது,