திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் ஶ்ரீராம் நகர் பகுதியில் அக்கா ரமணி 50, தங்கை ரேகா 43 இருவரும் வசித்து வந்தனர். நீண்ட நாட்களாக இவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் கிராம் நிர்வாக அலுவலர் கார்த்திக் சென்று பார்த்த போது அக்கா, தங்கை இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர்.