திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த சண்முகசுந்தரம் என்ற முதியவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். வீடுகளை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்து இருப்பதால் சடலத்தை வீட்டில் வைக்க முடியாமல் சாலையில் வைத்து உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்