திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சோழிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் நகர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலைகள் மோசமடைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாகவும், மோசமான சாலைகளால் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்தனர்