திருத்தணி: மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி பொதுமக்கள் போராட்டம்
திருத்தணி மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்காத அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். வருவாய் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.