திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நாபளூர் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் மணிமேகலை தம்பதியரின் 4 வயது குழந்தை முகிலன், திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் நிலையில், அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தமது 2 வயது குழந்தை காமேஸ்வரனுடன் இன்று காலை வந்த தாய் மணிமேகலை, பள்ளி வேனில் ஏற்றி விட்ட போது, ஓட்டுநர் வேனை இயக்கியதால் 2 வயது குழந்தை காமேஸ்வரன் வேனின் அடியில் சிக்கியதில் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தது.