திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி சாய்பாபா நகர் பகுதியில் உள்ள இரண்டாவது தெருவில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதால் மழைக்காலங்கள் தண்ணீர் செல்லாமல் அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார், நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையின் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்