ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் திருத்தணியை சேர்ந்த சக்திவேல் (30)என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அவர் உடல் திருத்தணி அடுத்த சத்திர ஜெயபுரம் பகுதியில் ராணுவ மரியாதையுடன் சக்திவேலின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.