கோகுல மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ சங்கங்கள் சார்பில் திருத்தணியில் தனியார் கூட்ட அரங்கில் இன்று கலாச்சார விழா நடைபெற்றது. கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் யாதவர்கள் 2 தலைமுறைகளாக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள யாதவர்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்க கோரி நீண்ட காலமாக போராடி வருவதாகவும் அவர் கூறினார்.