திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சி காந்தி கிராமம் பகுதியில் அரசு சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த வாரம் கட்டிடம் கட்ட வைக்கப்பட்டிருந்த 500 கிலோ இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் அசோக்குமார் ( 65) கனகம்மாசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டில் ஈடுபட்டதலக்காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த துஷ்யந்தன் ( 24), யுவராஜ் ( 23) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்