சேலம் மேற்கு: சேலத்தில் கல்லூரி மாணவர்களை ஏமாற்றி பல கோடி மோசடி: அரசு வழக்கறிஞர் மீது புகார்!
சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களின் ஆதார் கார்டுகளைப் பயன்படுத்தி 7,500 பேரிடம் விவசாயக் கடன் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதில் அரசு வழக்கறிஞருக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.