சேலம்: காவிரி தீர்ப்பை அமல்படுத்தினால் 10 ஏக்கர் நிலம் பரிசு - செ.நல்லசாமி அதிரடி
Salem, Salem | Nov 14, 2026 காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என நிரூபிக்கும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 ஏக்கர் நிலம் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். கள் தடை, பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் தேர்தல் முறைகள் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளார்.