விழுப்புரத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!
கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக பயிர் கடன், கரும்பு கடன் வழங்கக்கோரி போராட்டம்!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடனை முழுமையாக செலுத்திய விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பயிர் கடன் மற்றும் கரும்பு கடன் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
இதன் காரணமாக விழுப்புரம்–திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📍 விழுப்புரம் | TN32NEWS
#Villupuram #விழுப்புரம் #FarmersProtest #விவசாயிகள் #சாலைமறியல் #பயிர்கடன் #கரும்புகடன் #