*விழுப்புரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்!
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான **கலைத்திருவிழா போட்டிகள்** விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
🎤 வில்லுப்பாட்டு
💃 பரதநாட்டியம்
🏺 களிமண் சிற்பம்
🏖️ மணல் சிற்பம்
💃 பிறவகை நடனம் உள்ளிட்ட **32 வகையான போட்டிகள்** நடைபெற்றன.
இதில் **101 பள்ளிகளைச் சேர்ந்த 567 மாணவ-மாணவிகள்** கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
➡️ திங்கட்கிழமை – விழுப்புரம் ஸ்ரீ காமகோடி உயர்நிலைப்பள்ளி
➡️ 25-ந் தேதி – விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி
ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு **பரிசு மற்றும் சான்றிதழ்** வழங்கப்பட உள்ளது.
மேலும், ஒவ்வொரு பிரிவிலும் **முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்!**
#விழுப்புரம் #கலைத்திருவிழா #பள்ளிமாணவர்கள் #SchoolStudents #Kalaithiruvizha #VillupuramNews #TN32NEWS