செஞ்சியில் தொடர் இருசக்கர வாகன திருட்டு!**
சிறுவன் உள்பட 4 பேர் கைது
செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், செஞ்சி–திருவண்ணாமலை புறவழிச்சாலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
👉 **13 திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் + அவர்கள் பயன்படுத்திய 1 வாகனம் என மொத்தம் 14 வாகனங்கள் பறிமுதல்!**
#செஞ்சி #விழுப்புரம் #BikeTheft #VehicleTheft #PoliceAction #CrimeNews #VillupuramNews #TN32NEWS