விழுப்புரம் விக்கிரவாண்டி ஆற்றுப்பாலத்தில் லாரி விபத்து: ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை!
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி விக்கிரவாண்டி ஆற்றுப்பால தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், பூ வியாபாரியின் வாகனம் சேதமடைந்ததால் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.
#Villupuram #Vikravandi #TrichyChennaiHighway #TrafficAlert #RoadAccident #TamilNaduNews #villupuramnews
Viluppuram, Viluppuram | Aug 22, 2026