விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்சினை: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!**
விழுப்புரம் அடுத்த கோலியனூர் அருகே பனங்குப்பம் புதிய நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காலி குடங்கள் மற்றும் குடிநீர் தொட்டியுடன் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
💧 **“குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்”** என கோஷம் எழுப்பினர்.
இதனால் **விழுப்புரம்–புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.**
தகவலறிந்து வந்த வளவனூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து காலை 10.30 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.
#விழுப்புரம் #பனங்குப்பம் #குடிநீர்பிரச்சினை #சாலைமறியல் #Villupuram #TN32NEWS