**ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும்!**
**விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை**
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவதைப் போல, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
வறட்சி காரணமாக குடிநீர் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்
பழுதாகும் மின்மோட்டார்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்
வறட்சியை சமாளிக்க ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்
டேங்க் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
16-வது மானியக் குழுவுக்கான நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்
வி.பி.ஜி. ராம் ஜி திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டும்
மேலும், **மக்களோடு மக்களாக பணியாற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்** என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
#Villupuram #விழுப்புரம் #ஊராட்சிமன்றதலைவர்கள்