Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
मौत
Accident
Congress
Modi
Delhi
Viral
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh

News in Viluppuram

பட்டியலின மக்களின் உரிமைகளைப் பறிக்காதே!

தமிழக அரசு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை'யின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சி பாரதம் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றத்தின் காரணமாக, பட்டியலின மக்களின் கல்வி இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (Scholarship), மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள் போன்ற முக்கிய சலுகைகளிலும், உரிமைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பூவை.ஆறு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இந்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

அரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெயர் மாற்றத்தை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

#PuratchiBharatham #Villupuram #SocialJustice

பட்டியலின மக்களின் உரிமைகளைப் பறிக்காதே! தமிழக அரசு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை'யின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புரட்சி பாரதம் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றத்தின் காரணமாக, பட்டியலின மக்களின் கல்வி இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (Scholarship), மற்றும் தொழில் முனைவோர் திட்டங்கள் போன்ற முக்கிய சலுகைகளிலும், உரிமைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். புரட்சி பாரதம் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பூவை.ஆறு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இந்த கோரிக்கை மனுவை அளித்தனர். அரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெயர் மாற்றத்தை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். #PuratchiBharatham #Villupuram #SocialJustice

Viluppuram, Viluppuram | Jul 14, 2026

பூசாரியின் அராஜகம்? தேங்காய் உடைக்க ₹100 கட்டாய வசூல் – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ! 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதாந்திர அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்தனர்.

அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம், தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வதற்கு அங்குள்ள பூசாரி ஒருவர் கட்டாயப்படுத்தி 100 ரூபாய் காணிக்கை கேட்டு வாங்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பக்தர், பூசாரியின் இந்தச் செயலைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இது போன்ற கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் பூசாரி மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Melmalayanur #AngalammanTemple #Villupuram #Chetpet #Gingee #HRCE #TempleIssue #ViralVideo #News32

பூசாரியின் அராஜகம்? தேங்காய் உடைக்க ₹100 கட்டாய வசூல் – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதாந்திர அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டிருந்தனர். அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம், தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வதற்கு அங்குள்ள பூசாரி ஒருவர் கட்டாயப்படுத்தி 100 ரூபாய் காணிக்கை கேட்டு வாங்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பக்தர், பூசாரியின் இந்தச் செயலைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் இது போன்ற கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் பூசாரி மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #Melmalayanur #AngalammanTemple #Villupuram #Chetpet #Gingee #HRCE #TempleIssue #ViralVideo #News32

Viluppuram, Viluppuram | Jul 14, 2026

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்:*
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், நேற்று நள்ளிரவில் கைகளில் **தீப்பந்தங்களை ஏந்தி** இருண்ட தெருக்களில் நின்று தங்களது கோரிக்கையை வினோதமான முறையில் வலுவாகப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பேரங்கியூர் மந்தகரை தெருவில் புதிய மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

---

**#Villupuram #Thiruvennainallur #Perangiyur #StreetLightIssue #Protest #DistrictCollector #NEWS32 #TamilNaduNews**

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்:* அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், நேற்று நள்ளிரவில் கைகளில் **தீப்பந்தங்களை ஏந்தி** இருண்ட தெருக்களில் நின்று தங்களது கோரிக்கையை வினோதமான முறையில் வலுவாகப் பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பேரங்கியூர் மந்தகரை தெருவில் புதிய மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! --- **#Villupuram #Thiruvennainallur #Perangiyur #StreetLightIssue #Protest #DistrictCollector #NEWS32 #TamilNaduNews**

Viluppuram, Viluppuram | Jul 13, 2026

"பள்ளிக்கு செல்ல பஸ் வேணும், சாலையை சீரமைக்கணும்" - கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் கண்ணீர் மனு! 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வானூர் தாலுகா முருக்கம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

மனுவில் மாணவர்கள் கூறியிருப்பதாவது: "நாங்கள் குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து சிறுநாவூர் செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. நாங்கள் இந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. சைக்கிளில் செல்லும்போது அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. இதனால் பள்ளிக்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் காலதாமதமாகி விடுகிறது."

பள்ளி மாணவர்களின் இந்த நியாயமான கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32

👍 உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்!

#Villupuram #Vanur #Murukkam #Kunnam #SchoolStudents #CollectorOffice #BusFacility #RoadIssue #News32 #TN32News #LocalNews

"பள்ளிக்கு செல்ல பஸ் வேணும், சாலையை சீரமைக்கணும்" - கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் கண்ணீர் மனு! விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வானூர் தாலுகா முருக்கம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். மனுவில் மாணவர்கள் கூறியிருப்பதாவது: "நாங்கள் குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து சிறுநாவூர் செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. நாங்கள் இந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. சைக்கிளில் செல்லும்போது அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. இதனால் பள்ளிக்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் காலதாமதமாகி விடுகிறது." பள்ளி மாணவர்களின் இந்த நியாயமான கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32 👍 உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்! #Villupuram #Vanur #Murukkam #Kunnam #SchoolStudents #CollectorOffice #BusFacility #RoadIssue #News32 #TN32News #LocalNews

Viluppuram, Viluppuram | Jul 13, 2026

திண்டிவனம் அருகே சூரிய வார பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! 

தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பிரதோஷம் "சூரிய வார பிரதோஷமாக" பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் சூரிய வார பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் உற்சவர் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரருக்கு பால், தயிர், பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர் மற்றும் கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு சோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டன. நந்தி பகவான், மூலவர் எமதண்டீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சிறுவர்களின் சங்கொலி முழங்க, பக்தர்கள் "ஓம் நமச்சிவாய" என பக்தி கோஷமிட்டபடி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32
👍 எங்கள் பக்கத்தை பின்தொடர்ந்து, உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்!

#Tindivanam #Villupuram #Pradosham #ShivaTemple #News32 #TN32News #LiveNews #LocalNews #SpiritualNews

திண்டிவனம் அருகே சூரிய வார பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பிரதோஷம் "சூரிய வார பிரதோஷமாக" பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் சூரிய வார பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் உற்சவர் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரருக்கு பால், தயிர், பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர் மற்றும் கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு சோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டன. நந்தி பகவான், மூலவர் எமதண்டீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் ஆகியோர் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சிறுவர்களின் சங்கொலி முழங்க, பக்தர்கள் "ஓம் நமச்சிவாய" என பக்தி கோஷமிட்டபடி கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். 📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32 👍 எங்கள் பக்கத்தை பின்தொடர்ந்து, உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்! #Tindivanam #Villupuram #Pradosham #ShivaTemple #News32 #TN32News #LiveNews #LocalNews #SpiritualNews

Viluppuram, Viluppuram | Jul 13, 2026

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்: பரபரப்பு! 

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகள் அஞ்சலட்சம் (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நுழைவுவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

அந்த மனுவில் அஞ்சலட்சம் கூறியிருப்பதாவது: "எங்களுக்கு எந்தவித சொந்த வீட்டுமனைப் பட்டாவும் இல்லை. நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், மாதாந்திர வாடகை பணத்தைக் கூட செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்."

:
"எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஏற்கனவே பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, எங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருதி எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32

👍 உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்!

#Villupuram #CollectorOffice #Dharna

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்: பரபரப்பு! விழுப்புரம் அருகே உள்ள கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகள் அஞ்சலட்சம் (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நுழைவுவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த மனுவில் அஞ்சலட்சம் கூறியிருப்பதாவது: "எங்களுக்கு எந்தவித சொந்த வீட்டுமனைப் பட்டாவும் இல்லை. நாங்கள் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், மாதாந்திர வாடகை பணத்தைக் கூட செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்." : "எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி ஏற்கனவே பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, எங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருதி எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32 👍 உங்கள் பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள்! #Villupuram #CollectorOffice #Dharna

Viluppuram, Viluppuram | Jul 13, 2026

அதிமுகவில் உச்சகட்ட மோதல்: சி.வி.சண்முகம் மீது மாவட்ட செயலாளர் பசுபதி பரபரப்பு புகார்! 

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது தூண்டுதலின்பேரில் தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிரடியாக புகார் மனு அளித்துள்ளார்.

 புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், சில நபர்கள் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னை கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் இருந்து தூண்டியவர்கள் மீது உடனடியாக சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (SP) அலுவலகத்தில் பசுபதி நேரடியாகச் சென்று புகார் மனுவை அளித்துள்ளார்.

இந்த விவகாரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32

👍 உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள எங்கள் பக்கத்தைப் பின்தொடருங்கள்!

#Villupuram #CVShanmugam #Pasupathi #ADMK #AIADMK #VillupuramNews #CrimeNews #News32 #TN32News

அதிமுகவில் உச்சகட்ட மோதல்: சி.வி.சண்முகம் மீது மாவட்ட செயலாளர் பசுபதி பரபரப்பு புகார்! விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது தூண்டுதலின்பேரில் தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிரடியாக புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், சில நபர்கள் தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றம் சாட்டியுள்ளார். தன்னை கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் இருந்து தூண்டியவர்கள் மீது உடனடியாக சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (SP) அலுவலகத்தில் பசுபதி நேரடியாகச் சென்று புகார் மனுவை அளித்துள்ளார். இந்த விவகாரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 📰 விழுப்புரம் மக்களின் மனசாட்சி - நீயூஸ் 32 👍 உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள எங்கள் பக்கத்தைப் பின்தொடருங்கள்! #Villupuram #CVShanmugam #Pasupathi #ADMK #AIADMK #VillupuramNews #CrimeNews #News32 #TN32News

Viluppuram, Viluppuram | Jul 13, 2026

விழுப்புரத்தில் பரபரப்பு! காரில் கடத்தி வரப்பட்ட 220 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - இருவர் அதிரடி கைது! 

பெங்களூருவிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட, அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 220 கிலோ குட்கா பொருட்களைத் தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்!

விழுப்புரம் செஞ்சி சாலை வழியாகப் புதுச்சேரிக்கு குட்கா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் பாப்பான்குளம் பழைய செஞ்சி சாலை மேம்பால அருகே அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, 20 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது அம்பலமானது.

மகேஷ்குமார் (ராஜஸ்தான் மாநிலம்)
பரத் (பெங்களூரு)

220 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (மதிப்பு சுமார் ₹3,30,000)

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#News32 #ViluppuramNews

விழுப்புரத்தில் பரபரப்பு! காரில் கடத்தி வரப்பட்ட 220 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - இருவர் அதிரடி கைது! பெங்களூருவிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட, அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 220 கிலோ குட்கா பொருட்களைத் தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்! விழுப்புரம் செஞ்சி சாலை வழியாகப் புதுச்சேரிக்கு குட்கா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் பாப்பான்குளம் பழைய செஞ்சி சாலை மேம்பால அருகே அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, 20 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது அம்பலமானது. மகேஷ்குமார் (ராஜஸ்தான் மாநிலம்) பரத் (பெங்களூரு) 220 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (மதிப்பு சுமார் ₹3,30,000) கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #News32 #ViluppuramNews

Viluppuram, Viluppuram | Jul 12, 2026

கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்! விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை முடக்கி உறவினர்கள் அதிரடி மறியல்! 

கோவை வேளாண் கல்லூரியில் படித்து வந்த விக்கிரவாண்டி மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த மாணவி தரனிக்கா, இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

மாணவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கக் கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார், மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

#News32 #VikravandiNews

கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்! விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை முடக்கி உறவினர்கள் அதிரடி மறியல்! கோவை வேளாண் கல்லூரியில் படித்து வந்த விக்கிரவாண்டி மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த மாணவி தரனிக்கா, இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மாணவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கக் கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார், மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #News32 #VikravandiNews

Viluppuram, Viluppuram | Jul 12, 2026