பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள்: டாஸ்மாக் ஊழியர்கள் 28-ந் தேதி வேலைநிறுத்தம்!**
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் **கு.பாலசுப்பிரமணியன்** கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் கடைகளின் நிர்வாக பிரச்சினைகளையும் அரசு தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
**பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.**
📍 **விழுப்புரம் | TN32NEWS**
#TASMAC #டாஸ்மாக் #TASMACEmployees #டாஸ்மாக்ஊழியர்கள் #வேலைநிறுத்தம்