100 நாள் ஆட்சி நிறைவு – விக்கிரவாண்டி த.வெ.க. சார்பில் சாதனை விளக்க நிகழ்ச்சி!
விக்கிரவாண்டி விழுப்புரம் தென்மேற்கு மாவட்டக் கழக செயலாளர் விஜய் வடிவேல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பல்வேறு அரசுத் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.
மேலும், பொதுமக்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
100 நாள் ஆட்சி நிறைவை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
#TVK #தமிழகவெற்றிக்கழகம் #TVK100Days #ஜோசப்விஜய் #விஜய்வடிவேல் #விக்கிரவாண்டி #கஞ்சனூர் #விழுப்புரம் #100நாள்சாதனை #TN32NEWS