
மாலை நேரத்தில் நிறுத்தப்படும் செல்லங்குப்பம் பேருந்து – பொதுமக்கள், மாணவர்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து காணை வழியாக செல்லங்குப்பம் பகுதிக்கு இயக்கப்படும் 28- என்ற எண் கொண்ட பேருந்து, தினமும் மாலை நேரத்தில் அகரசித்தாமூர் பகுதியில் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாழப்பட்டு, கெடார், செல்லங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்து ஏன் வரவில்லை என போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டால், “பேருந்து பஞ்சர் ஆகிவிட்டது, கேஸ் லீக் ஆகிறது” உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பேருந்து சேவை இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் பேருந்து வசதி இல்லாமல் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, செல்லங்குப்பம் வழித்தடத்தில் இயக்கப்படும் 28-ஆம் எண் பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாலை நேரத்தில் பேருந்து சேவை தடைபடுவதற்கான காரணத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #news 32 #TN32VILLUPURAM