பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் கடந்த 3நாட்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் கடந்த 3நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.