பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சி 9வது வார்டு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக பேரூர் செயலாளர் வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து மீஞ்சூர் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியில் மீஞ்சூர் பேரூர் திமுக கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் வாக்கு சேகரித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.