சேலம் தெற்கு: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தவெக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
நகர்ப்புற பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டம், புறநகர் பஸ்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதை வரவேற்கும் விதமாக சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.