சங்ககிரி: சங்ககிரி அருகே விபத்து: 3 மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
Sankari, Salem | Oct 3, 2026 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பட்டறைமேடு பகுதியில் கார் மற்றும் லாரி மின்கம்பங்கள் மீது மோதியதில் 3 மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் சேலம்-கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சங்ககிரி நகர் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.