
விழுப்புரம் அதிரடி: பள்ளி அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது! 1 கிலோ கஞ்சா, 3 பைக்கள் பறிமுதல்!
விழுப்புரம் வி.பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எஸ்பி-யின் உத்தரவின்பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வி.பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளியின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கைதானவர்கள்:
பார்த்திபன் (26) - வெங்கடேசபுரம் பிள்ளையார் கோவில் தெரு, பெரும்பாக்கம்.
சஞ்சய் (20) - அக்ரகார தெரு, தென்மங்கலம்.
மவுலீஸ்வரன் (24) - திருமுண்டீச்சரம், திருவெண்ணெய்நல்லூர்.
மோனிஸ்வரன் (19) - ராமானுஜபுரம் மாரியம்மன் கோவில் தெரு, கொளத்தூர்.
தாஸ் (26) - பிள்ளையார் கோவில் தெரு, சேர்ந்தனூர்.
இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 5 நபர்களிடமிருந்தும் சுமார் ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி அருகே கஞ்சா விற்ற கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Viluppuram #ViluppuramNews #CrimeNews #PoliceAction #GanjaSeized #TamilNaduPolice #News32