பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைக் கண்டித்து, கையில் ரூ.20,000 பணத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா, சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவர் தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்வதற்காக அதிகாரிகளிடம் மனு அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
கையில் ரூ.20 ஆயிரத்துடன் வினோத போராட்டம்:
இந்நிலையில், பட்டா வழங்கிட அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக் கூறி ஆத்திரமடைந்த வெங்கடேசன், இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைக் கண்டிக்கும் விளம்பரப் பதாகையை வைத்தார்.
மேலும், தன் கையில் ரூ.20,000 ரொக்கப் பணத்தை வைத்துக்கொண்டு, "அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் போராட்டம் நடத்துகிறேன்" எனக் கூறி நுழைவுவாயிலில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு:
பட்டா மாற்றத்திற்கு அதிகாரிகளின் கெடுபிடி மற்றும் லஞ்சக் கோரிக்கையைக் கண்டித்து, விவசாயி ஒருவர் கையில் பணத்துடன் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#News32 #TN32News #Villupuram #VillupuramNews #Melmalayanur #FarmerProtest