விழுப்புரம் அருகே பரபரப்பு: கனிமவள குவாரிகளை மூட வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை, குண்டலப்புலியூர், நங்காத்தூர் மற்றும் அதனூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கனிமவள கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகக் கூறி, அவற்றை உடனடியாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காணை ஒன்றியப் பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்களைச் சுரண்டும் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மூட வேண்டும் என்று வலியுறுத்தி அதிரடி கோஷங்களை எழுப்பினர்.
#பாமக #விழுப்புரம் #விக்கிரவாண்டி #காணை #கனிமவளச்சுரண்டல் #ஆர்ப்பாட்டம் #PMK #Villupuram #Vikravandi #NewsUpdate
Viluppuram, Viluppuram | Aug 4, 2026