முசிறி: வடக்கு சொரியம்பட்டி, சேருகுடி மற்றும் சிட்டிலரை பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது, 12 பவுன் நகை பறிமுதல்
முசிறி அருகே வடக்கு சொரியம்பட்டியில் மருதை என்பவரது வீட்டிலும், சேருகுடியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டிலும் மற்றும் சிட்டிலரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வீட்டிலும் தங்க நகைகள் திருட்டுப் போனது. இந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் தீவிர விசாரணை செய்து ஆங்கியத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.