முசிறி: உமையாள்புரத்தில் திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவாக அமைச்சர் கே.என் நேரு பிரச்சாரம்
முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய வேட்பாளர் அருண் நேரு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், பெண்கள் கல்வி வளர்ச்சியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார். இதில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.