வீட்டுமனை பட்டா, வீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா! | கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு | TN32NEWS
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு வழங்கக்கோரி இருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி தாலுகா எடமலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (35), ஏதாநெமிலி கிராமத்தைச் சேர்ந்த எபினேசர் (38) ஆகியோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இருவரும் போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
TN32NEWS – விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய Subscribe செய்யுங்கள்.
#விழுப்புரம் #கலெக்டர்அலுவலகம் #மாற்றுத்திறனாளிகள் #தர்ணா #வீட்டுமனைபட்டா #வீடுவழங்குக #செஞ்சி #TN32NEWS #VillupuramNews #TamilNews