விழுப்புரத்தில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு! 🍎🥗
நெருப்பில்லா சமையலில் மாணவிகளின் அசத்தல்!
விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரியில், ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சத்தான உணவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
நெருப்பில்லாமல் மாணவிகள் தயாரித்து காட்சிப்படுத்திய பழங்கள், கீரைகள், தானியங்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து உணவுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாணவிகள் தயாரித்த உணவுகளை சுவைத்ததுடன், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார்.
📍 விழுப்புரம் | சாலாமேடு
#Villupuram #NutritionMonth #NoFireCooking #NutritionAwareness #MGRWomensCollege #TN32NEWS #விழுப்புரம் #ஊட்டச்சத்து #நெருப்பில்லாசமையல்