*பள்ளி கான்கிரீட் மேற்கூரை தொடர்ந்து இடிந்து விழும் அவலம் – மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை*
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீ.சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து, தினந்தோறும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், மேற்கூரையில் இருந்து கான்கிரீட் பகுதிகள் தொடர்ந்து பெயர்ந்து விழுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீ.சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சேதமடைந்த கான்கிரீட் மேற்கூரையை மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்*