ராமையன்பாளையத்தில் அடுத்தடுத்து விபத்துகள்! ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்
கோலியனூர் அருகேயுள்ள ராமையன்பாளையத்தில் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் பல ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒருவழிச்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், **இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள்** நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நேற்று சாலையை கடக்க முயன்ற **அங்கம்மாள் என்ற மூதாட்டி அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.** இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற **வினேஷ் என்ற இளைஞர் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.**
சாலை விரிவாக்கப் பணி தாமதம், போதிய மின்விளக்குகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி, ஆத்திரமடைந்த கிராம மக்கள் **கோலியனூர்–பண்ருட்டி சாலையில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.**
அப்போது விபத்துக்குள்ளான அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையிலும் மறியலை கைவிடாமல் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த **டி.எஸ்.பி. சரவணக்குமார்** பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
**சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.**
📍 **ராமையன்பாளையம் | கோலியனூர் | விழுப்புரம்**
**TN32NEWS – உண்மை செய்திகள்… உடனுக்குடன்!**
#TN32NEWS #விழுப்புரம் #Villupuram #ராமையன்பாளையம் #கோலியனூர் #Panruti #பண்ருட்டி #சாலைமறியல் #விபத்து #RoadAccident #NationalHighway #சாலைபாதுகாப்பு #BreakingNews #TamilNews #VillupuramNews