சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றாவது வார்டு சர்ச் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு
சாத்தான்குளம் மேற்கு பகுதியில் ஒன்றாவது வார்டில் சர்ச் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகமான அளவில் தண்ணீர் வீணாக செல்வதால், அப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் குறைவாக வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விரைவில் இந்த உடைப்பை சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.