சாத்தான்குளம்: வர்த்தக சங்க அலுவலகத்தில் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வர்த்தக சங்க அலுவலகத்தில் வரும் 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்பு மனு தாக்கலில் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு மனு தாக்கல் செய்தனர்.