சாத்தான்குளம்: சாத்தான்குளம் பஜார் பகுதியில் மற்றும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலையில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் அனைத்தும் அகற்றும் நிகழ்வு பஜார் பகுதியில் இருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில், நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சிவசண்முகநாதன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாத்தான்குளம் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது