ஆவுடையார் கோவில்: வேட்டனூர் கிராமத்தில் சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா வேட்டனூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரிக்கை நிறைவேறாத காரணத்தினால் இன்று கிராம மக்கள் வேட்டனூர் கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கொடுத்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது சாலை வசதி செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.