ஆவடி: சென்னீர்குப்பத்தில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்,
டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம் சென்னீர்குப்பம் மாசிலாமணி நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மழை நீர் தேங்கி நின்றது அதே போன்று திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட ஈசா ஏரி பகுதியில் மழைநீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக அமைச்சர் நாசர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.