சாத்தான்குளம்: காமராஜர் சிலை அருகே நூலகத்திற்குள் புகுந்து வாலிபருக்கு சரமாரி வெட்டு அலறி அடித்து ஓடிய வாசகர்கள் போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்த அன்னராஜ் (30) என்பவர் இன்று சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் நூலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த மர்ம கும்ப கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தகராறு முத்திய நிலையில் அண்ணராஜை நூலகத்தின் உள்ளே தள்ளிய கும்பல் நூலகத்திற்குள் வைத்து சரமாரியாக வெட்டியது.