சாத்தான்குளம்: சாத்தான்குளம் மெயின் பஜார் பகுதியில் கடையில் பயங்கர தீ விபத்து
சாத்தான்குளம் மெயின் பஜாரில் கணேசன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உணவுகத்தில் திடீரென கேஸ் லீக் ஆகி தீ பிடித்தது. இதனைத் தொடர்ந்து தீயானது அருகே உள்ள மற்றொரு கடைக்கும் பரவியது. இது குறித்து சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.