சாத்தான்குளம்: சாலைப்புதூரில் தனியார் பள்ளி பின்புறம் உள்ள இடத்தில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் தனியார் பள்ளிக்கூடம் பின்புறம் உள்ள இடத்தில் வேலி மரங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் பேரில் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். தொடர்ந்து வேலி மரங்களை அப்புறப்படுத்தினர் இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.