சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை - மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் நினைவு தினம் அவர்களது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை - மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு முதலில் மகன் பென்னிக்சும் பின்னர் மறுநாள் தந்தை ஜெயராஜும் என அடுத்தடுத்து தந்தை மற்றும் மகன் என இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.