சாத்தான்குளம்: தச்சமொழி பகுதியில் புதிய வாறுகால் பணிகளை தடை செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் புதிதாக வாறுகால் அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகள் சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து புதிய வாறுகால் அமைக்கும் பணியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.