சாத்தான்குளம்: முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் திரும்பிச் சென்றனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் காலையில் 8:00 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் முதலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் காலை 11 மணியில் இருந்து தற்போது வரை மருத்துவர் அங்கு பணியில் இல்லை. இதனால் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் இன்று மதியம் ஒரு மணி அளவில் திரும்பி சென்றனர்.