துறையூர்: சாயக்கார தெருவில் 33 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் துறையூர் சாயக்காரா தெருவைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி ப்ரீத்தா (33) திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 2 வருடங்களே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.